0


"I have travelled across the length and breadth of India and I have not seen one person is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such caliber, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage and therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their selfesteem, their native culture and they will become what we want them, a truly dominated nation"


Lord Macaulay’s address to the British parliament on 02-02-1855 

பிரிட்டிஸ் காலணியாதிக்க சக்திகள் இந்தியாவுக்குள் வணிகநோக்கில் ஊடுறுவி இந்தியாவை கைப்பற்றுவதற்கு சில வருடங்களுக்கு முன்னதாக மெக்காலே என்ற பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். இந்தியாவைச் சுற்றிப்பார்த்துவிட்டு இறுதியா 02-02-1855 அன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசும்போது இந்தியாவைப் பற்றி சொன்ன தகவல்களின் சுருக்கம்தான் மேற்கண்ட உரை. அதன் மொழியாக்கம்: 

"இந்தியா முழுவதும் பயணித்தபோது ஒரேயொரு பிச்சைக்காரர் அல்லது திருடரையோ காண முடியாதளவுக்கு செல்வ வளமுள்ள தேசம்.இதன் சமூக மதிப்பு மற்றும் மேன்மையான மக்களைக் காணும்போது,முதுகெலும்பாக விளங்கும் இவர்களின் தெய்வீக மற்றும் பாரம்பர்ய பின்னணியை உடைக்கும்வரை இந்த தேசத்தை நம்மால் வெல்லமுடியும் என்று கருதவில்லை. ஆகையால், அவர்களின் பண்டைய கல்விமுறை மற்றும் நாகரிகத்தை மாற்றியமைத்து, இந்தியர்கள் அவற்றிலிருந்து அந்நியப்பட்டு,ஆங்கிலம்தான் சிறந்தது மற்றும் அவர்களுடையதை விடவும் சிறப்பானது என்று எண்ணும்போது, இந்தியர்கள் தங்கள் சுயமரியாதையை இழந்து நாம் விரும்பியவாறு அவர்கள் மாறும்போது உண்மையிலேயே நாம் அவர்களை வெற்றிகொள்ள முடியும்" 

மொத்த தமிழ்நாட்டிலும் மூன்றிலக்கங்களைக்கூட தாண்டாது சுப்ரமணியன் சாமி என்ற அமெரிக்க உளவாளியின் ஜனதா கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை.இந்திய அளவில் அரசியல் கோமாளி என்று அறியப்படும் சுப்ரமணிய சாமி,சமீபத்தில் நடந்த (நடத்தப்பட்ட?) மும்பை குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து DAN ஆங்கில பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிப்பது எப்படி?(Analysis: How to wipe out Islamic terror) என்ற கட்டுரையில் இந்திய முஸ்லிம்களுக்கும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் எதிராக விஷம் கக்கியுள்ளார். இவனின் உளரலை வழக்கமான உளரல்களில் ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாதளவு பிரவீன் தொகாடியாவை மிஞ்சும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதியிருப்பது கண்டிக்கத்தக்கது. 

//We need a collective mindset as Hindus to stand against the Islamic terrorist. The Muslims of India can join us if they genuinely feel for the Hindu. That they do I will not believe unless they acknowledge with pride that though they may be Muslims, their ancestors were Hindus. If any Muslim acknowledges his or her Hindu legacy, then we Hindus can accept him or her as a part of the Brihad Hindu Samaj (greater Hindu society) which is Hindustan. // 

இந்திய முஸ்லிம்களின் முன்னோர்கள் ஒருகாலத்தில் இந்துக்கள் என்பதால்,இஸ்லாமிய தீவிரவாதத்திற்கெதிராக முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டுமாம்.நல்லது! ஒத்துழைக்கலாம். சு.சாமியின் முன்னோர்களால் தீவிரமாகத் தினிக்கப்பட்ட இந்துத்வா வர்ணாஸ்ரமக் கொள்கையிலிருந்து விடுதலைபெற்று இஸ்லாத்தை தழுவிய முன்னாள் இந்துக்களான இன்றைய முஸ்லிம்களுக்கு எதிரான இந்துத்வா தீவிரவாதங்களுக்கு எதிராக யாரிடம் ஒத்துழைப்பு கேட்பது என்பதை சு.சாமி தெளிவுபடுத்துவாரா? 

குண்டுவெடிப்பின்போது ஏற்பட்ட சோகத்தில் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாகப் பேசுவது நியாயமானது.ஆனால்,அவ்வாறு பேசும் கருத்துக்கள் இன்னொரு சாராருக்கெதிரான விஷம் தோய்ந்த வார்த்தைகளாக இருப்பதை அறிவார்ந்த எவரும் நிச்சயம் ஏற்க மாட்டார்கள்.இந்தியாவின் முதல்நிலை பிரச்சினையாக 'இஸ்லாமிய' தீவிரவாதம் இருப்பதாகக் கதையளப்பது,அதைவிடவும் முதன்மைப் பிரச்சினையாக இருக்கும் இந்துத்வா தீவிரவாதத்தை பின்னுக்குத் தள்ளிவிடும் என்பதை தமிழக 'கோயபல்ஸ்' சுப்ரமணிய சாமி உணர்ந்தாரா என்று தெரியவில்லை! 

//Fanatic Muslims consider Hindu-dominated India “an unfinished chapter of Islamic conquests”. All other countries conquered by Islam 100% converted to Islam within two decades of the Islamic invasion. Undivided India in 1947 was 75% Hindu even after 800 years of brutal Islamic rule. That is jarring for the fanatics.// 

இந்தியாவை ஒருங்கிணைத்த மொகலாயர்களின் ஆட்சியில் முஸ்லிம்கள் பெற்ற பலன்களைவிட பன்மடங்கு பலன்களை அரசவை பார்ப்பன ஆலோசகர்கள் அனுபவித்த வரலாற்றை சு.சாமி திரிக்க முயல்கிறார்.இஸ்லாம் வெற்றிகொண்ட நாடுகளிலெல்லாம் 20 ஆண்டுகளில் 100% மக்களும் முஸ்லிம்களாக மதம்மாற்றப்பட்டார்கள் என்பது உண்மையெனில் 2011 இலும் 800 வருடங்களுக்கும் மேலாக இஸ்லாமியர்களின் ஆளுகைக்குள் இருந்த இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பது ஏன் என்பதற்கு திருவாளர் சுப்ரமணியன் என்ன விளக்கம் தரப்போகிறார்? 

//India that is Bharat that is Hindustan is a nation of Hindus and others whose ancestors were Hindus. Others, who refuse to acknowledge this, or those foreigners who become Indian citizens by registration, can remain in India but should not have voting rights (which means they cannot be elected representatives).// 

இந்தியா இந்துக்களின் தேசம் என்றும் அவர்களின் முன்னோர்களும் இந்துக்களே என்பதையும் ஒப்புக்கொள்ளாத, பதிவுகளில் மட்டுமே இந்தியர்களாக இருப்பவர்கள் இந்தியாவில் இருக்கலாமாம்,ஆனால் தங்களுக்கான மக்கள் மன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் ஓட்டுரிமை அவர்களுக்குக் கூடாதாம்! முன்னாள் இந்துக்களுக்கு சு.சாமி தரும் மரியாதையைப் பார்த்தீர்களா! மேலே இடம்பெற்றுள்ள மெக்காலேயின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள இந்தியாவை விட்டுவைத்தவர்கள் யாரென்று சுப்பிரமணியனுக்கு தெரியுமா? 

அதெல்லாம்சரி! குறுநில மன்னர்களின் பிரதேசங்களாக சிதறியிருந்த இந்தியா என்ற அகண்டபாரதம் யாரால் ஒருங்கிணைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டது என்பதை வந்தேறி வகையறா சு.சாமிக்கு யாராவது இந்திய வரலாறு பாடமெடுத்தால் நல்லது.அதை உச்சநீதிமன்றத்தில் குட்டுபட்டு வேறுவழியின்றி ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள சமச்சீர் கல்விமுறை பாடத்திட்டங்களிலிருந்து செய்தாலும் வரவேற்கத்ததக்கதே! 

இந்தியாவில் முஸ்லிம்களின் தேசப்பற்றைக்குறைக்கூற சீன/அமெரிக்க உளவாளி சுப்ரமணிய சாமிக்கு சற்றும் உரிமையில்லை. இந்தியா எங்கள் தாய்நாடு மட்டுமல்ல! தந்தைநாடும்கூட! 

ஜெய் அல் ஹிந்த்!!!

»View More
0


 சேலம் மாவட்டத்தில் தனக்கென முழுச்செல்வாக்கு கொண்ட தி.மு.க., மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் இன்று காலை 10 மணிக்கு போலீசார் முன்பு சரண் அடைந்தார். முன்னதாக 10 கார்களில் புடைசூழ வந்த போது குறிப்பிட்ட எல்லை பகுதியில் போலீசார் ( கோட்டை மாரியம்மன் கோயில் வாசல் அருகே ) தடுத்து நிறுத்தி அவர் வந்த காரை மட்டும் அனுமதித்தனர். கே.பி.,ராமலிங்கம் எம்.பி., கள்ளக்குறிச்சி எம்.பி., ஆதிசங்கர், மாஜி எம்.எல்.ஏ., வீரபாண்டி ராஜா, வக்கீல் மூர்த்தி, குடும்ப டாக்டர் ஒருவர் ஆகியோர் வீரபாண்டி ஆறுமுகத்துடன் வந்திருந்தனர்.

போலீஸ் விசாரணை அறைக்குள் வீரபாண்டி ஆறுமுகம் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டார். மற்றபடி யாரும் அனுமதிக்கப்படவில்லை. மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பிச்சை ‌தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர். இவர்களுடன் துணை தாசில்தார் பாலகிருஷ்ணன், பெரியசாமி, அரசு டாக்டர்கள் கண்ணன், நடராஜன், கோகிலா ஆகியோரும் உள்ளனர்.

போலீஸ் விசாரணைக்கு செல்லும்போது தொண்டர்கள் போலீஸ் மற்றும் அ.தி.மு.க, அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

அ.தி.மு.க., அரசு பொய் வழக்கு போட்டிருக்கிறது என்றும் தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்த போதிலும் முதலில் விசாரணைக்கு ஒத்துழையுங்கள் என்று கோர்ட் கூறி விட்டது. போலீஸ் காவலில் 3 நாள் விசாரிக்கப்படவும் உத்தரவிட்டது.

சேலம் அங்கம்மாள் காலனி மக்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை, அபகரித்ததாக, மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உட்பட, 13 பேர் மீது, சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு மீட்புக் குழு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அது போல பிரிமியர் ரோலர் மில் வழக்கிலும், வீரபாண்டி ஆறுமுகம் உட்பட, 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு பின்புறம் நில அபகரிப்பு மீட்புக் குழு அலுவலகம், மிகவும் குறுகலான சந்தில் அமைந்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஆஜராகும் நிலையில், அவரது ஆதரவாளர்கள், சேலத்தில் அதிக அளவில் கூடுவர். இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய வீதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

13 பேரில் 4 பேர் கைது : அங்கம்மாள் காலனி நில விவகார வழக்கில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தி.மு.க.,வைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிக பூபதி, காங்கிரஸ் பிரமுகர்கள் எம்.ஏ.டி., கிருஷ்ணசாமி, உலகநம்பி, கவுன்சிலர் ஜிம்மு ராமு, மகேந்திரன், சித்தானந்தம், கனகராஜ், ஆட்டோ முருகன், கறிக்கடை பெருமாள், மாஜி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், முன்னாள் ஆர்.டி.ஓ., பாலகுருமூர்த்தி ஆகிய 13 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. எம்.ஏ.டி., கிருஷ்ணசாமி, கனகராஜ், ஆட்டோ முருகன், கறிக்கடை பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருணாநிதி ஆறுதல்: நேற்று நடந்த தி.மு.க., பொதுக்குழுவில் பங்கேற்ற வீரபாண்டி ஆறுமுகம் தம்மீதும், கழக தொண்டர்கள் மீதும் பொய்வழக்கு போடப்பட்டு என்னை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதே இதற்கு இதுவரை கட்சி ஏதாவது நடவடிக்கை எடுத்ததா ? இப்படி விட்டு விட்டால் கட்சி ஒன்றுமில்லாமல் போய்விடும் என தனது குமுறலை வெளியிட்டார். பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்த கருணாநிதி சும்மா விட்ருவோம்மாய்யா., என்று தேற்றினார்.


பஜார் தெருவில் கடைகள் அடைப்பு : இவரது விசாரணை இன்று நடப்பதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் பஜார் தெருவில் உள்ள கடைகளை போலீசார் அடைக்கும் படி கூறிவிட்டனர். இவருடன் வந்த வாகனங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பழைய பஸ் ஸடாண்ட் முதல் , கோட்டை மாரியம்மன் கோயில் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது இவரிடம் விசாரரணை நடந்து வருகிறது. இவர் 3 நாள் போலீஸ் கஸ்டடியில் இருப்பார். வரும் புதன்கிழமை மாலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.

»View More
0

soooonnnnnnnnnnn

»View More

Recent Posts

Followers

My BLoglist